உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே...
இப்படித் தான் உங்கள் பேச்சும், வழிகாட்டுதலும் எங்களுக்குள் ஊடுருவி எங்களில் ஒருவராக நீங்கள் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறீர்கள். கொரோனா நெருக்கடி காலகட்டம் முடிந்த தருணம். Work From Home-ன் கடைசி நாட்கள். சென்னையில் குடியேறி தினசரி அலுவலகம் வர தயாராகி கொண்டிருந்தேன். அப்போது புதிதாய் பூத்த மலராய் எங்கள் அணியில் கைகோர்த்தீர்கள். Video Call-ல் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.
வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர். இளைஞர் பட்டாளமான எங்களுடன் எப்படி Sync ஆகப் போகிறீர்கள். நாங்களும் எப்படி Sync ஆகப் போகிறோம் என்ற கேள்வி தவித்துக் கொண்டிருந்தது. அலுவலகம் வந்த ஓரிரு நாட்களில் என் மன ஓட்டங்களை சுக்கு நூறாய் உடைத்து எறிந்து விட்டீர்கள். அப்படி ஒரு Positive Energy. ஒவ்வொருவரையும் மென்மையாய் கையாண்ட பக்குவம் தென்றல் வந்து தீண்டியதை போன்ற உணர்வை உண்டாக்கியது.
எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனாப் பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது
இப்படித்தான் நாட்களும், எங்களின் வேலையும் இனிப்பாய் இனித்தது. ஒருமுறை உங்கள் வாழ்க்கை வரலாற்றை உங்களையே பேசவைத்து குறிப்பெடுத்து கொண்டேன். அதை இளையராஜா பாடல் வரிகளுடன் செதுக்கி முடித்த போது அப்படி ஒரு பேரானந்தம். அதையே கடந்த பிறந்த நாளுக்கு பரிசாகவும் அளித்தது நெகிழ்ச்சியான தருணம். எப்படியும் ஒரு 10 ஆண்டுகள் உடன் பயணித்து உங்களுக்குள் இருக்கும் அழகை விட்டு விட்டு, அறிவால் என்னை பட்டை தீட்டி விட வேண்டும் என்று நினைத்தேன்.
https://mageshbabujayaram.blogspot.com/2022/06/one-india-tamil.html
ஆனால் வெறும் ஒன்றரை ஆண்டுகளுடன் காலம் வேறு மாதிரியான கணக்கு போட்டு விட்டது. ஒரு செய்தியை 360 டிகிரியில் சுழன்றடிக்கும் வகையில் நீங்கள் கற்றுக் கொடுத்த யுக்தியை ஒருபோதும் மறக்க மாட்டேன். இது ஒரு சாம்பிள் தான். கத்துக்கிட்ட வித்தையை லிஸ்ட் போட்டால் நீண்டு கொண்டே போகும். அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நீங்கள் எங்கள் அலுவலகத்தில் இருந்து குட்பை சொன்னது ஆறாத வடுவாய் வாட்டி கொண்டிருக்கிறது. உங்கள் கண்களில் கண்ட கண்ணீர் எங்களுக்கானது. அதை இனியும் வீணடிக்க வேண்டாம்.
அதற்கு பதில் எங்களுக்காக வாழ்த்து மழை பொழியுங்கள். தொடர்பில் இருங்கள். ஆலோசனைகளை வாரி வழங்குங்கள். இன்றுடன் குட்பை சொல்லிவிட்டதாய் நினைக்க முடியவில்லை. ”வாத்தியாரே நாளைக்கு பாப்போம்” என்று தான் சொல்லத் தோன்றுகிறது. உங்களுக்காக வாலியின் வரிகளில் இளையராஜா இசையில் ஓர் அற்புதமான Dedicate...
விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா....