சம்மர் கட்டிங் ஸ்பெஷல்


ஆண் குழந்தைகள் வளர வளர குறும்புகளுக்கும், அடாவடிகளுக்கும் பஞ்சமே இருக்காது. எங்கள் இனியன் மட்டும் விதிவிலக்கா என்ன? கோடையை சமாளிக்க ஒட்ட வெட்டிய மண்டையும், கிறுக்கி தள்ள வாங்கிய கையெழுத்து பிரதியும், மயிலாவின் அதே அகல டப்பா வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிய பாக்ஸும், கைவண்ணத்தில் ஜாலம் காட்ட புது பென்சிலும். இப்படி குதூகலமாக தொடங்கியிருக்கிறது இந்த நாள்.

வீட்டிற்கு வந்ததும் விறுவிறுவென எழுத தொடங்கி விட்டார். முடிச்சுட்டு தான் மறுவேளை போல. அடங்கி ஒடுங்கி நல்ல பிள்ளை போல Handwriting Bookல் எழுதுவது எல்லாம் ஒருநாள் கூத்து தான். அப்புறம் பாருங்க சேட்டையை. வீடு தாங்காது, நாடு தாங்காது, தேவி பொறுக்க மாட்டாள். அதுல பாருங்க... இன்னும் கோடை விடுமுறை தொடங்கல. அதுக்குள்ள தான் இப்படி. அடுத்த ரெண்டு மாசம் இன்னும் என்னென்ன ஆட்டம் காட்டப் போறாரோ?
Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post