கடந்த சீசனில் இரண்டு புள்ளிகளில் சாம்பியன் பட்டத்தை Man City அணியிடம் Liverpool தவறவிட்டிருந்தது. அந்த தாகத்தை தீர்த்து கொள்ளும் வகையில் இந்த ஆட்டத்தில் Liverpool அணி களமிறங்கியது. இரு அணிகளிலும் ஜாம்பவான்களுக்கு பஞ்சமில்லை. லிவர்பூல் அணியில் கீப்பர் Adrian, Right Back அர்னால்ட், Centre Back விர்ஜில் வேன் டைக், Left Back ராபர்ட்சன், Centre Midfielder ஜோர்டான் ஹெண்டர்சன் (கேப்டன்), பேஃபின்ஹோ, தியகோ, முகமது சாலா, ராபர்டோ பிர்மினோ, லூயிஸ் டயஸ் ஆகியோர் களமிறங்கினர். Benfica-ல் இருந்து வாங்கப்பட்டிருந்த புதிய வரவான Darwin Núñez என எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. என்ன ஒரு குறை என்றால் Sadio Mane ட்ரான்ஸ்பரில் Barcelona சென்றது தான்.
இதேபோல் சிட்டி அணியில் கீப்பர் எடர்சன், கைலி வாக்கர், நாதன் அகே, புரூனே, பெர்னார்டோ சில்வா, மக்ரஸ், கிரீலிஸ், பொருஸியா டார்ட்மெண்ட்டில் இருந்து புதுவரவான எர்லிங் ஹாலந்து என அதிரடி பட்டாளமே களமிறங்கியது. Ball Possession பெரும்பகுதி மான்செஸ்டர் சிட்டி அணியின் கைகளில் இருந்தாலும் முதல் கோல் போட்டது லிவர்பூல் தான். சாலா Assist செய்ய பாக்ஸின் இடதுபுற கார்னரில் அட்டகாசமாக கோல் அடித்தார் அர்னால்ட். 70வது நிமிடத்தில் லிவர்பூல் கீப்பர் அட்ரியன் பாலை தவறவிட பாக்ஸுக்குள் புகுந்து சிட்டி வீரர்கள் அதகளம் செய்துவிட்டார்கள். ஆல்வரஸ் கச்சிதமாக அதை கோலாக்க, VAR பிரச்சினை எழுந்தது. அதிலும் கோல் உறுதி செய்யப்பட சிட்டி அணிக்கு சற்று ஆறுதல் கிடைத்தது.
அடுத்து ஹேண்ட் பால் நிகழ்வால் பெனால்டி கிடைக்க, அதை அற்புதமாக கோலாக்கினார் சாலா. கடைசியாக 90வது நிமிடத்தில் ராபர்ட்சன் வலது விங்கில் இருந்து Assist செய்ய புதுமுக நாயகன் Nunez ஹெட்டர் மூலம் பிரீமியர் லீக்கில் தனது முதல் கோலை பதிவு செய்தார். இதன்மூலம் 3-1 என்ற கோல்கணக்கில் லிவர்பூல் தனது முதல் வெற்றியுடன் 2022-23 கால்பந்து சீசனை தொடங்கியுள்ளது. இம்முறையும் Liverpool அணியை சுற்றி கோப்பைகளும், கொண்டாட்டங்களும் நிரம்ப குதூகலத்திற்கு தயாராவோம்.