எங்கள் புன்னகை

 

புதிதாக முளைத்த புகைப்படச் சுருளில் அழகாய் பூத்து நிற்கும் மலர்கள். எங்கள் விவசாயத் தோட்டத்தில் ஒய்யாரமாய் ரீங்காரமிடும் வாண்டுகள். மெல்லிய நடையால் நிலத்தை பண்படுத்தி மண்வாசனையால் களிப்படையும் செல்லங்கள். இயற்கையின்றி எந்தவொரு ஜீவராசியும் உயிர் வாழாது என்றெண்ணித் தானோ, தங்கள் முதல் கொண்டாட்டத்தை இங்கிருந்து தொடங்கி இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

இவர்களின் மொழியோ தேனாக இனிக்கும். நடையோ துள்ளலை உண்டாக்கும். புன்னகையோ பேரானந்தம் அளிக்கும். அழுகையோ கருங்கல்லையும் கரைய வைக்கும். கோபமோ எதிரிகளையும் ஓட விடும். இவர்கள் உடனான ஒவ்வொரு மணித்துளியும் எங்களுக்கு திகட்டாத அறுசுவை விருந்து. இவர்கள் வளர்ந்து, கற்று, உலகறிந்து நல்மொழி பேசட்டும். பொதுவென்று வைத்து வாழும் மாந்தர்கள் நிறைந்த சமூகத்தின் அங்கத்தினர்களாக மாறட்டும்.


Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post