உண்மை இதுதான்



அன்றொரு நாள் ராஜா வேட்டைக்குப் போனார். முயல்குட்டி கூட வேட்டையில் சிக்கவில்லை. வெறும் கையுடன் சோகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இன்று யார் முகத்தில் முழித்தேனோ? சகுனமே சரியில்லை என ராஜா புலம்பித் தீர்த்தார். வழக்கமாக சூரிய நமஸ்காரம் செய்த பின்னரே வேற யாரையும் கண்திறந்து பார்ப்பார். அன்றைக்கு என்ன நடந்தது என்றால், சூரிய நமஸ்காரம் செய்யச் சென்ற வழியில் இரும்பல் சத்தம் கேட்க, திடீரென கண் விழித்து சாலையில் பார்க்க செருப்பு தைக்கும் முதியவர் இரும்பிக் கொண்டிருந்தார்.

இந்த காட்சி நினைவுக்கு வரவும், உடனே அந்த கிழவனை இழுத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். அந்த கிழவனை பார்த்து, இவன் முகத்தில் விழித்தால் எதுவும் உருப்படாது. இவன் உயிரோடு இருப்பதே என் நாட்டிற்கு கேடு. இவனை சிரச்சேதம் செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். தீர்ப்பைக் கேட்டதும் முதியவர் வாய்விட்டு சிரித்து விட்டார். எதற்காக இப்படி சிரிக்கிறாய் என்று ராஜா கேட்க, என் முகத்தில் விழித்ததால் உங்களுக்கு ஒரு முயல்கூட கிடைக்கவில்லை. உண்மைதான்.

என் ராசியால் முயலுக்கு கூட ஆபத்து இல்லை. ஆனால் நான் உங்கள் முகத்தில் அல்லவா விழித்தேன் என்றதும் திடுக்கிட்டார். தனது தவறை உணர்ந்து அந்த கிழவனுக்கு பொற்கிழி கொடுத்து அனுப்பினார். இப்படி கதைகளாக, உதாரணங்களாக கூறி நம்முடைய மூடநம்பிக்கைகளை சுக்குநூறாக உடைத்து எறிந்து விடுகிறது. அறிவியல் உண்மை எது? நமது முன்னோர்கள் சொன்னதில் எதை நம்புவது? எவற்றை நம்பக்கூடாது? உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு சுருக்கமாகவும் பொட்டில் அடித்தாற் போலவும் இப்புத்தகம் விளக்கம் கொடுக்கிறது.
Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post