The Reds: செந்நிறத்தின் எழுச்சி


உலகின் மிகவும் பழமையான கால்பந்து தொடர் என்ற பெருமைக்கு உரியது FA Cup (The Football Association Challenge Cup). இது இங்கிலாந்தில் நடைபெறும் ஆண்களுக்கான வருடாந்திர Knock-Out கால்பந்து தொடர். தோல்வி என்றால் வெளியே கிளம்ப வேண்டியது தான். 1871ல் தொடங்கி தற்போது 151வது ஆண்டை எட்டியிருக்கிறது. இத்தகைய சிறப்புக்குரிய ஆண்டில் எனது பேவரைட் Liverpool FC அணி கோப்பை வென்றிருப்பது உற்சாகப் பெருவெளியின் உச்சம் என்றே சொல்லலாம். அதுவும் 16 ஆண்டுகளுக்கு பின்னர் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. என்னுடைய பேவரைட் பயிற்சியாளர் Jurgen Klopp-பிற்கு மிகப்பெரிய சாதனை நிகழ்வாக அமைந்துவிட்டது.


Premier League, Champions League, FA Cup, League Cup, UEFA Super Cup, FIFA Club World Cup என 6 கோப்பைகளை பெற்று தந்த முதல் ஜெர்மன் பயிற்சியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி பேவரைட் கேப்டனான Jordan Henderson கடந்த 2015ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 6 வெவ்வேறு தொடர்களில் 6 கோப்பைகளை தலைமையேற்று வென்று தந்துள்ளார். Liverpool FC வரலாற்றில் இப்படியொரு சாதனையை படைக்கும் முதல் கேப்டன் இவர் தான். விஷயத்திற்கு வருவோம். கடந்த 14ஆம் தேதி லண்டன் Wembley ஸ்டேடியத்தில் நடந்த FA Cup இறுதிப் போட்டியில் Chelsea vs Liverpool FC அணிகள் மோதின. இதில் Liverpool அணியில் 5 மாற்றங்கள் செய்திருந்தார்கள்.


காயமடைந்த Fabinho-விற்கு பதிலாக ஜோர்டான் ஹெண்டர்சன், தியகோ ஜோட்டாவிற்கு பதிலாக Salah, கர்டில் ஜோன்சிற்கு பதிலாக Thiago Alcântara, மீண்டும் அணிக்கு திரும்பிய Andrew Robertson, மேடிப்பிற்கு பதிலாக Ibrahima Konate என அதிரடி பட்டாளம் களமிறங்கியது. Ball Possession-ஐ பொறுத்தவரை இரு அணிகளுமே (Chelsea 47%, Liverpool 53%) கிட்டதட்ட சமமாக பகிர்ந்தே விளையாடின. கோல் போஸ்ட் நோக்கிய ஷாட்கள் என்றால் இரண்டு அணிகளும் 2 - 2 சமபலத்தை காட்டின. இதேபோல் Pass, Defence, Discipline ஆகியவற்றிலும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை இல்லை என்று காண்பித்தன. இருப்பினும் அதிக கோல் வாய்ப்புகளை Liverpool ஏற்படுத்தியது கவனிக்க வேண்டிய விஷயம்.


Mendy, Becker இருவரும் கோல்களை தடுப்பதில் மிகத் தீவிரமாக செயல்பட்டனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆட்டத்தை இழக்க இரு அணிகளும் தயாராக இல்லாததால் கடைசி வரை யாருமே கோல் போட முடியவில்லை. இதனால் 90 நிமிடங்கள், அதன் பிறகான கூடுதல் 30 நிமிடங்களில் 0-0 என்றே ஆட்டம் நிறைவடைந்தது. அதன்பிறகு பெனால்டி ஷூட் அவுட்டிற்கு ஏற்பாடு செய்தனர். முதல் 5 வாய்ப்புகளில் 4-4 என இரு அணிகளும் சமன் செய்தன. இதனால் ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. அடுத்து வரும் சம வாய்ப்புகளில் யார் முன்னிலை பெறுகிறார்களோ, அவர்களே வெற்றியாளர்கள். அதன்படி, செல்சீ அணியில் Ziyech ஒரு கோல் அடித்து 5-4 என முன்னிலை பெற்றது.


லிவர்பூல் அணியில் Jota ஒரு கோல் அடித்து 5-5 என சமன் செய்தார். இது பரபரப்பை பற்ற வைத்தது. ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்தது. செல்சீ அணியில் Mount கோலை மிஸ் செய்தார். அதை அற்புதமாக Alisson தடுத்திருந்தார். இங்கேயே லிவர்பூல் அணியின் வெற்றி தீர்மானிக்கப்பட்டு விட்டது. அடுத்து லிவர்பூல் அணியின் Tsimikas ஒரு கோல் அடித்து 5-6 என அரங்கை அதிரவைத்து வெற்றி களிப்பில் மைதானத்தில் ஓட்டம் பிடித்தார். உடனே ஒட்டுமொத்த லிவர்பூல் அணியும் சேர்ந்து கொண்டது. அரங்கம் அதிர்ந்தது. உங்களின் சத்தம் எனக்கு கேட்கவில்லை. இன்னும் சத்தமாக என்பது போல் Tsimikas செய்கை காட்டிக் கொண்டே வேகமாக ஓடினார். நாலாபுறமும் பட்டாசுகள் வெடித்து ஒளி மழையாய் பொழிந்தன.


ரசிகர்கள் மெய்சிலிர்த்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தனக்கே உரிய ஸ்டைலில் FA Cup கோப்பையை வாங்கி ஒருவித துள்ளலுடன் அதை லிவர்பூல் கேப்டன் Henderson உயர்த்தி காண்பித்தார். பிறகென்ன எல்லாம் goosebumps moments தான். இதே மாதத்தில் Premier League, Champions League என இரண்டு கோப்பை வாய்ப்புகள் லிவர்பூல் அணிக்காக காத்திருக்கிறது. 2019ஆம் ஆண்டை போல் மீண்டும் ஒரு திருவிழா கோலம் காணுவார்களா லிவர்பூல் ரசிகர்கள். காத்திருப்போம். அடுத்த பேரானந்த பெருவெளிக்கு...

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post