அட்டவணையில் முதல் இரண்டு இடங்களில் இருந்த Manchester City(90), Liverpool(89) அணிகளில் யாருக்கு கோப்பை என எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதனால் இரண்டு போட்டிகளையும் பார்க்க வேண்டிய கட்டாயம் லிவர்பூல் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. அதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன? Tablet-ல் லிவர்பூல் அணியை ஆட்டத்தை நேரலையிலும், மொபைலில் மான்செஸ்டர் சிட்டி அணியின் ஆட்டத்தின் ஸ்கோர் போர்டையும் ஒரே சமயத்தில் பார்த்து கொண்டிருந்தேன். நேற்றைய தினம் சிட்டி தோற்க வேண்டும். லிவர்பூல் ஜெயிக்க வேண்டும். ஆனால் தொடக்கம் இரு அணிகளுக்குமே அதிர்ச்சியூட்டியது. Liverpool 0-1 Wolves எனவும், Man City 0-1 Aston Villa எனவும் கோல் அடித்து எதிரணிகள் முன்னிலை பெற்றன. 24வது நிமிடத்தில் Sadio Mane கோல் அடிக்க லிவர்பூல் ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். இரண்டாவது பாதி நம்மை இருக்கையின் நுனியில் அமர வைத்து விட்டது.
சிட்டி அணி மேலும் ஒரு கோல் வாங்க, லிவர்பூல் ரசிகர்கள் Anfield மைதானத்தில் உற்சாகத்தில் குதித்தனர். ஆனால் 76வது நிமிடத்தில் தொடங்கி அடுத்த 5 நிமிடங்களில் 3 கோல் அடித்து சிட்டி 3-2 என முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்துவிட்டது. இதனால் லிவர்பூல் ரசிகர்களுக்கு கலக்கம் ஏற்பட்டது. கோப்பை கைவிட்டு செல்வதை உணர ஆரம்பித்தனர். சரி. வெற்றியுடன் நிறைவு செய்வோம் என தங்களை தேற்றிக் கொண்டனர். 84வது நிமிடத்தில் சாலா, 89வது நிமிடத்தில் ராபர்ட்சன் என இரண்டு கோல்கள் அடித்து இறுதியில் லிவர்பூல் வெற்றி பெற்றது. கடந்த மே 14ஆம் தேதி Domestic League-ஆன FA கோப்பையை வென்று லிவர்பூல் சாதனை படைத்திருந்தது. அதற்கு முன்பு EFL கோப்பையை பிப்ரவரியில் கைப்பற்றி சரித்தது படைத்தது. இதே உற்சாகத்தில் நேற்று மூன்றாவது கோப்பையை (EPL) வெல்லும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
இருப்பினும் ரசிகர்கள் மனதில் லிவர்பூல் எப்பவும் சாம்பியன் தான் என்பதை மறுக்க முடியாது. கோப்பை வென்ற உற்சாகத்தில் Etihad Stadium-ல் கொண்டாட்டங்கள் களைகட்ட, Anfield மைதானம் ஆரவாரமின்றி காணப்பட்டது. அதேசமயம் இந்த தொடர் வெற்றிகரமாக நிறைவடைய உறுதுணையாக இருந்த ரசிகர்கள், வீரர்கள் உள்ளிட்ட பலருக்கும் நன்றி சொல்லப்பட்டது. இந்த தொடருடன் லிவர்பூல் அணியில் இருந்து விடைபெறும் Divock Origi-க்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் லிவர்பூல் வீரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் மைதானத்தில் வலம் வந்தனர். பயிற்சியாளர் Jurgen Klopp மைதானத்தை சுற்றி வந்து அனைவருக்கும் நன்றி சொன்னார். வீரர்களின் குழந்தைகள் லிவர்பூல் ஜெர்சி அணிந்து கால்பந்து விளையாடியது கண்கொள்ளா காட்சி. அடுத்து தலைமுறையும் கால்பந்து விளையாட்டிற்கு தயாராகிவிட்டது. இதையடுத்து 23 கோல்கள் அடித்து Tottenham Hotspur FC அணியின் Son Heung-min உடன் லிவர்பூல் அணியின் Mo Salah கோல்டன் பூட் விருதை பகிர்ந்து கொண்டார். இதேபோல் 20 க்ளீன் ஷீட் பெற்று Man City அணியின் Ederson உடன் லிவர்பூல் அணியில் Alisson Becker கோல்டன் குளோவ் விருதை பகிர்ந்து கொண்டார்.