தமிழ்நாட்டின் மின் தேவையும், உற்பத்தி இலக்கும்


உலகம் முழுவதும் மக்கள்தொகை பெருக்கமும், கோடை வெயிலின் தாக்கமும் மின் தேவையை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. தமிழகத்தை பொறுத்தவரை நிலக்கரி தான் பிரதான மின் உற்பத்தி ஆதாரமாக விளங்குகிறது. இதற்காக நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகின்றன. இதையே நம்பி பூமித்தாயை சுரண்டி கொண்டே இருந்தால் ஒருகட்டத்தில் எல்லாம் பூஜ்யத்தில் முடிந்துவிடும். எனவே மரபுசாரா எரிசக்தியை நோக்கி கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே காற்று, சோலார், ஹைட்ரோ, பயோகேஸ், நியூக்ளியர், கேஸ் மற்றும் டீசல் ஆகிய மாற்று சக்தியை கையிலெடுத்து தமிழகம் மின் தேவையை சமாளித்து கொண்டிருக்கிறது. இதில் மின்சார உற்பத்திக்கான கட்டமைப்பு மற்றும் உற்பத்தி என இரண்டு விதமான அளவீடுகள் இருக்கின்றன. அதாவது, 


Installed Electricity Capacity, 2019-2020


Coal and Lignite - 34%

Wind - 31%

Solar - 10%

Hydro - 8%

Biogas/Biomass - 7%

Nuclear - 6%

Gas and diesel - 4%


Source Wise Generation, 2019-2020


Coal and Lignite - 46%

Nuclear - 19%

Wind - 13%

Biogass/Biomass - 7%

Hydro - 6%

Solar - 5%

Gas and diesel - 4%


மற்றொரு முக்கியமான விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் மின்சார ஈகோ சிஸ்டம் என்பது இரண்டு விதமான அமைப்புகளால் கையாளப்பட்டு வருகிறது. ஒன்று Tangedco. இது தமிழ்நாட்டில் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேற்பார்வை செய்கிறது. மற்றொன்று Tantransco. இது மின்சாரம் அனுப்புவதை திட்டமிடல் மற்றும் செயல்படுத்துவதை கண்காணிக்கிறது. இவற்றின் மூலம் எதிர்கால மின் தேவையை திட்டமிடல் பெரிதும் அவசியமாகிறது. தமிழ்நாட்டின் மின் தேவையானது குடியிருப்பு, விவசாயம், தொழிற்துறை, வர்த்தகம், போக்குவரத்து மற்றும் இதர துறைகளை பொறுத்தது. இதனை ஈடுசெய்யும் வகையில் மின் உற்பத்தியை பல்வேறு மரபுசாரா எரிசக்தி மூலம் அதிகப்படியாக உண்டாக்க வேண்டும்.


இதுதொடர்பாக WRI India ஆராய்ச்சி மேற்கொண்டு 2030-31ஆம் ஆண்டிற்குள் அடைய வேண்டிய மூன்று தேவை படிநிலைகள், நான்கு விநியோக படிநிலைகள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மே 24 அன்று சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள Lemon Tree ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் (திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு) விக்ரம் கபூர் அறிக்கையை வெளியிட்டார். ஆய்வறிக்கையை மையப்படுத்தி நடந்த கருத்தரங்கில் 4 முக்கிய வல்லுநர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் Poovulagin Nanbargal அமைப்பின் நிறுவனர் ஜி.சுந்தர்ராஜன், Auroville Consulting துணை நிறுவனர் மார்டின், Prayas Energy அமைப்பின் உறுப்பினர் அன் ஜோசே, Independent Journalist சிபியரசு ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.


சுற்றுச்சூழல், மரபுசாரா எரிசக்தி தொடர்பாக நான் கலந்து கொள்ளும் மூன்றாவது கூட்டம் இது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அடிப்படையான விஷயங்களை கற்றுக் கொள்வதில் கொஞ்சம் முன்னேறி இருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் பல கருத்தரங்குகள், கூட்டங்கள், ஆய்வுகள் தொடரும். அதில் என் பங்களிப்பும் நீளும் என்று நம்புகிறேன். சுற்றுச்சூழலை பாதுகாப்போம். அதற்காக திட்டமிடுவோம். அதை நோக்கி அரசையும், தன்னார்வ அமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும் நகர்த்துவோம்.


மேற்குறிப்பிட்ட ஆய்வறிக்கையை பற்றி முழுமையாக இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம்: https://www.wri.org/research/tamil-nadu-electricity-mix-2030-states-energy-transition

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post